இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு! அரசின் அதிரடி நடவடிக்கை!

0
84
What are the curfew restrictions? Here is the important information of the Minister!
What are the curfew restrictions? Here is the important information of the Minister!

இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு! அரசின் அதிரடி நடவடிக்கை!

கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்தது. அதன் உரு மாற்றமாக டெல்டா வகை கோரானோ உருவானது. அதனை அடுத்து தற்பொழுது தொற்று அதிக அளவு அச்சுறுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இத்தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வரும் ஜனவரி 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளனர்.

தற்போது இந்தியாவில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த 20க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த ஒமைக்ரான் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர்.ஒமைக்ரான் தொற்று மூன்றாவது அலையாக வந்தாலும் சொல்லும்படியான பாதிப்புகள் இருக்காது என்று கூறி உள்ளனர். தற்பொழுது கிறிஸ்துமஸ் புத்தாண்டு போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வர இருக்கிறது. அதனால் பல மாநிலங்களில் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றனர்.

மக்கள் கூட்டம் கூடுவது நாள் பெருவாரியாக தொற்று பரவல் ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்த லக்னோவில் தற்போது 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளனர். இந்த தடை உத்தரவை ஆனது ஜனவரி 5ஆம் தேதி வரை நீடிக்கும் என கூறியுள்ளனர்.அதே போல மகராஷ்டிராவில் அதிகளவு ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால் அதன் தலைநகர் மும்பையில் இரு தினங்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.இன்று மற்றும் நாளை இரு தினங்களுக்கு ஊரடங்கு ஊதரவை அமல்படுத்தியுள்ளனர்.அதுமட்டுமின்றி மக்கள் கூட்டம்,ஊர்வலம் போன்றவற்றிக்கு தடை விதித்துள்ளனர்.