ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை டிஸ்மிஸ் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்! நல்லதுக்கே காலம் இல்லை போல! 

0
217

ஆந்திர பிரதேச முதலமைச்சராக பணிபுரிந்து வருபவர் தான் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் ஆந்திரவில் சிறப்பான ஆட்சியை புரிந்து வருகிறார் என்ற செய்திகளை நாம் அடிக்கடி கேட்டதுண்டு.

அவ்வாறு இருக்க உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மீது அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியதாக ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பதவியிலிருந்து நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்கே பாப்டேவுக்கு, ‘மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி எஸ் ரமணா கட்டுப்படுத்துகிறார் மேலும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’ என்ற குற்றச்சாட்டை ஒரு கடிதத்தில் எழுதி இருந்தார்.

இதனால் வழக்கறிஞர்கள் ஜிஎஸ் மணி மற்றும் பிரதீப் யாதவ் ஆகிய இருவரும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக பொதுநல மனு தாக்கல்  செய்துள்ளனர்.

அந்த மனுவில்  பின்வருமாறு அவர்கள் கூறியுள்ளனர்:

“ஊழல், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்பட 20 கிரிமினல் வழக்குகள் ஜெகன்மோகன் ரெட்டி மீது நிலுவையில் உள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான ஜெகன்மோகன் ரெட்டி, எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். அவரை உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

நீதிமன்றத்திலிருந்து சுயலாபம் அடைவதற்காக, தனது பதவியையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, வெளிப்படையாக ஒரு நீதிபதி மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ஜெகன்மோகன் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த நீதிபதி மீது அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டைக் கூறி நீதித்துறைக்கு மக்கள் மனதில் பெரும் களங்கத்தை ஜெகன்மோகன் உருவாக்கியுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டியை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும். அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

Previous articleஇன்று உலக கை கழுவும் தினம் கொண்டாடப்படுகிறது! ஏன் தெரியுமா?
Next articleஇந்தியாவிற்கு புதிதாக வரும் நான்கு ரபேல் விமானங்கள்!