வீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள் – ஆந்திர முதலமைச்சர் துவங்கி வைத்தார்!

Photo of author

By Parthipan K

ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடா எனும் இடத்தில், இன்று அம்மாநில முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்திருந்த நவரத்தின திட்டங்களில் ஒன்றான, மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு திட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார்.

அதாவது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள், நவரத்தின திட்டங்களை அறிவித்திருந்தார் அதில் முக்கியமான ஒன்றாக வீடு வீடாக நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் அறிவித்திருந்த இந்த திட்டத்தை இன்று விஜயவாடாவில் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். இத்திட்டம் ஆனது 830 கோடி ரூபாய் செலவில், 9,260 வாகனங்களை கொண்டு செயல்படுத்தப்பட்டதாகும்.

அதாவது 50 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற கணக்கின் அடிப்படையில் சுய உதவிக்குழு பணியாளராக பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.