யதார்த்தமாக பேசிய பாக்யராஜை பதார்த்தமாக தூக்கி செல்ல காத்திருக்கும் போலீஸ்

0
192

யதார்த்தமாக பேசிய பாக்யராஜை பதார்த்தமாக தூக்கி செல்ல காத்திருக்கும் போலீஸ்

திரைப்பட விழா ஒன்றில் யதார்த்தமாக பேசிய இயக்குநர் கே பாக்யராஜ் மீது ஆந்திர மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் ’பெண்கள் தான் அனைத்து பாலியல் குற்றங்களுக்கும் காரணம் என்றும், பெண்கள் கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்துடன் இருந்தால் எந்த பாலியல் குற்றமும் நடக்காது என்றும் பொள்ளாச்சி விவகாரத்தில் கூட குற்றவாளிகள் ஆண்களாக இருந்தாலும் அந்த குற்றங்களுக்கு பெண்களும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்றும் பேசினார்.

மேலும் ஆண்கள் சின்ன வீடு வைத்துக்கொள்வதால் பெரிய பிரச்சனை ஏற்படாது என்றும் ஆனால் பெண்கள் கள்ளக் காதல் வைத்துக்கொண்டால் அந்த குடும்பத்திற்கு பெரிய பிரச்சனை வரும் என்றும் பேசினார்.

பாக்யராஜ் பேசிய இந்த யதார்த்த உண்மைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர மாநில பெண்கள் அமைப்பு ஒன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் பாக்யராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கில் பாக்கியராஜ் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Previous articleஇளம்பெண்ணை காருக்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூரன்! 19 வயது மாணவிக்கு நடந்த சோகம்
Next articleஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here