கோவில் பூசாரியை அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய பெண்கள்: ஆந்திராவில் பரபரப்பு

0
225

கோவில் பூசாரியை அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய பெண்கள்: ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திராவில் உள்ள ஒரு கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த பூசாரியை அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை செய்து கொண்டிருந்த ஐயர் ஒருவர், கோவிலுக்கு வரும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது

இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஒரு பெண்ணிடம் அந்த ஐயர் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே தனது வீட்டிற்கு சென்று தனது உறவினர்களை அழைத்து வந்ததாகவும் தெரிகிறது

கோவிலுக்குள் சென்ற அந்த நேராக கருவறையிலிருந்த ஐயரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அதுமட்டுமன்றி அவர் அணிந்திருந்த வேட்டியை உருவி நிர்வாணமாகினர். இந்த சம்பவத்தால் கோவிலுக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

உடனடியாக அந்த பகுதியில் உள்ள மற்ற அய்யர்கள் ஓடி வந்து நிர்வாணமாக இருந்த அய்யரை காப்பாற்றியதோடு அந்த பெண்களிடம் சமாதானமாக பேசினார். இருப்பினும் பெண்கள் சமாதானம் ஆகாமல் அந்த அய்யரை தொடர்ந்து உதைக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அந்த கோவிலுக்கு வந்த போலீசார், அய்யர் மற்றும் பெண்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். அய்யர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

Previous articleசிம்புவுக்கு நல்ல புத்தியை கொடுத்த ஐயப்பன்: மீண்டும் தொடங்கும் மாநாடு!
Next articleதிருவள்ளுவருக்கு காவி வேசம்! பாஜகவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் திருமாவளவன் அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here