ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா பன்முகத்திறமைக் கொண்டவர். ஒரு பாடகியாக இருந்து பின் திரை உலகில் கால்பதித்து, ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக வலம் வந்தார். பின்னணிப் பாடகியாக இருந்த ஆண்ட்ரியாவை தன்னுடைய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகம் செய்துவைத்தார் கௌதம் மேனன்.பிறகு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
மிஷ்கின் இயக்கிய 2016 ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் தேய்வழக்கு பேய் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான திரைப்படம் என பெயர் பெற்றது. அதில் அவர் பேயை தேவதைபோல் காண்பித்து இருப்பார். அந்த படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது பிசாசு 2 இயக்கி வருகிறார் மிஸ்கின். அதில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட ரிலீஸ் வேலைகளில் நடந்து வந்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கபப்ட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆகும் என ஆண்ட்ரியா தன்னுடைய சமூகவலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.
http://https://www.instagram.com/p/Cf88tjjp_Mq/?utm_source=ig_web_copy_link