ஆண்ட்ரியா படத்தின் அப்டேட் வந்துடுச்சு!! ஃபர்ஸ்ட் லுக் எப்ப தெரியுமா??

Photo of author

By CineDesk

ஆண்ட்ரியா படத்தின் அப்டேட் வந்துடுச்சு!! ஃபர்ஸ்ட் லுக் எப்ப தெரியுமா??

பிரபல பின்னணி பாடகி இருப்பவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர் பின்னணி பாடகியும் பின்னணி குரல் கொடுப்ப வரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் இவர் நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல் யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரி காலகட்டங்களில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். இவர் வாழும் கலை மற்றும் இளைஞர்களுக்காக தி ஷோ மஸ்ட் கோ ஆன் என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

தொடர்ந்து இவர் நடிகையாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் நடிப்பில் உருவாக்கி இருக்கும் பிசாசு 2 திரைப்படத்தைப் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிசாசு 2 திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு குறித்து படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.