அட., நம்ம ஆண்ட்ரியாவா இது! கல்லூரி மாணவியாக மாறிய ஆண்ட்ரியா!

Photo of author

By Jayachithra

அட., நம்ம ஆண்ட்ரியாவா இது! கல்லூரி மாணவியாக மாறிய ஆண்ட்ரியா!

Jayachithra

கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ஆண்ட்ரியா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் நல்ல குரல் வளத்துடன் பாடி அனைவரையும் அசத்தி வருகிறார். மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் சுவாரசியமான சில தகவல்களை பகிர்வதை வழக்கமாக வைத்திருப்பார்.

அவ்விதத்தில் நேற்று ஆண்ட்ரியா, தான் கல்லூரி படிக்கும் பருவத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய ஆசைகளை பற்றி பதிவிட்டு இருக்கிறார். ‘நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது, வளர்ந்த பெண்ணாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

https://www.instagram.com/p/CRDJZdKLfgF/?utm_source=ig_web_copy_link

இப்பொழுது நான் ஒரு வளர்ந்த பெண், இருந்தாலும், சுதந்திரமான கல்லூரி மாணவியாக மீண்டும் எனது கல்லூரிக்குச் செல்ல விரும்புகிறேன்.’ என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஆண்ட்ரியா இரு நாட்களுக்கு முன் சுடிதார் அணிந்து ஒரு போட்டோவை பதிவிட்டு இருந்தார்.

அப்புகைப்படத்தில் ஆண்ட்ரியாவை பார்க்க கல்லூரி மாணவி போல இருந்தார். அதன் காரணமாகத்தான் அவர் தன்னுடைய கல்லூரி கால நினைவுகள் வந்து பழைய புகைப்படங்களை தேடிக் கண்டெடுத்து நேற்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.