அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்! முதல்கட்டமாக செல்போன்கள் ஒப்படைப்பு!

0
234
Anganwadi staff decide to hand over cell phones! Is all this the reason?
Anganwadi staff decide to hand over cell phones! Is all this the reason?

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்! முதல்கட்டமாக செல்போன்கள் ஒப்படைப்பு!

சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் நிலுவை சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம் இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெற்றது எனபது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து நேற்று நாமக்கல்லில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாண்டிமாதேவி தலைமையில் மற்றும் மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி கலந்துகொண்ட நிலையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க கோரி  கோரிக்கைகள் வைத்தனர். அங்கன்வாடிக்கு வரும்  குழந்தைகளின் முழு விவரங்களை சேமித்து வைப்பதற்காக அனைத்து அங்கன்வாடிகளுக்கும் செல்போன்கள் வழங்கப்பட்டது. அந்த செல்போன்களை ஜூன் 29ஆம் தேதி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரிடம் ஒப்படைப்பதாகவும் கூறினார்கள். மாவட்டச் செயலாளர் பிரேமா பொருளாளர் கலா உள்பட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டு நடத்திய இந்த கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்த  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Previous articleஅக்னிபத் வீரர்களுக்கு தேர்வு தொடக்கம்! இதோ முழு விவரங்கள்!
Next articleBREAKING NEWS ஆன்லைன் ரம்மிக்கு தடையா? பரிந்துரை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு!