அங்கவை, சங்கவை.. இவர்கள் யாரென்று தெரியாமல் கலாய்த்து விட்டோமே.!!

0
461
Angavai Sangavai Story in tamil

Angavai Sangavai Story in tamil: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் பெற்றவர் தான் ஷங்கர். இவர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிவாஜி. இந்த திரைப்படம் (sivaji movie) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்றில் அங்கவை, சங்கவை என்ற பெயர் கொண்ட காட்சி ஒன்று இடம்பெறும். அதில் இரு பெண்களை கருப்பாக காண்பித்து அவர்களுக்கு அங்கவை, சங்கவை என்று பெயர் வைத்து நகைச்சுவையாக அந்த படத்தில் காட்சி ஒன்று வைத்திருப்பார்கள். அந்த காட்சியில் புகழ்ப்பெற்ற பட்டிமன்றத் தலைவர் சாலமன் பாப்பையாவும் இருப்பார்.

அந்த படம் வெளியான சமயம் இந்த காட்சிக்கு தமிழ் அறிஞர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். பெண்களுக்கு கருப்பு சாயம் பூசப்பட்டு இவ்வாறாக காட்சி வைப்பதா என்றும் சிலர் தெரிவிக்க, அதில் இடம் பெற்ற அங்கவை, சங்கவை என்ற பெயர் நகைச்சுவையான பெயர் அல்ல என்றும், அவர்களை பற்றி தெரியாதவர்கள் தான் இப்படி செய்வார்கள் என்றும் இதற்கு பட்டிமன்றத் தலைவர் சாலமன் பாப்பையா (salmon papaya) எப்படி சம்மத்தித்தார் எனவும் கருத்து பகிரப்பட்டு வந்தது.

அங்கவை, சங்கவை

அங்கவை, சங்கவை பெயர் கொண்டவர்கள் யார் என்று பார்த்தால், கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்கள் தான் அவர்கள். காட்டிற்கு வேட்டைக்கு தேரில் சென்று கொண்டிருக்க, காட்டில் வேட்டை முடித்து வந்து தன் தேரை எடுக்க செல்லும் போது அதில் முல்லை கொடி படர்ந்திருந்ததை பார்த்த பாரி மன்னன். தன் தேரையே முல்லைக்கொடிக்காக அங்கேயே விட்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட மன்னனின் மகள்கள் தான் அங்கவை, சங்கவை.

அங்கவையும், சங்கவையும் பேரழகிகள். அவர்கள் அழகில் மட்டும் அல்ல. அறிவிலும் சிறந்தவர்கள் அவர்கள்.  புறநானூற்றில் காணப்படும் “அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம்” என்னும் பாடல் பாரி மகள்கள் எழுதியது தான். இந்த பாடலின் பொருளை படித்தால் அவர்களின் தந்தை பாரியை இழந்த துயரத்தை அதில் கூறியிருப்பார்கள்.

இதனை தான் வைரமுத்து அவர்கள் “அற்றை திங்கள் அந்நிலவில்” என்னும் வார்த்தைகளை போட்டு எழுதியிருப்பார். அதன் பிறகு யுகபாரதியும் வார்த்தைகளை மாற்றி எழுதியுருப்பார். இந்த பாடல்கள் தமிழ் சினிமாவில் இடம் பெற்று ரசிக்கப்பட்ட பாடல்கள்.

மேலும் பாரி மன்னனின் புகழும், அங்கவை, சங்கவையின் புகழும் பரவியிருந்த காலத்தில் இவர்களை திருமணம் செய்ய மூவேந்தர்களும் நினைத்தார்கள் என்றும், ஆனால் அதற்கு பாரி மன்னும், அங்கவை, சங்கவை சம்மதம் தெரிவிக்காததால் மூவேந்தர்களால் பாரி மன்னன் இறந்து போனார் மற்றும் அவர்கள் மகள்கள் இருவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்றும் வரலாற்றில் கூறப்படும் சம்பவம்.

அங்கவை, சங்கவை இருவருக்கும் தமிழ் அறிவை ஊட்டி வளர்த்தவர் பாரி மன்னனின் நெருங்கிய தோழர் கபிலர் புலவர். அதன்பிறகு ஒளவையார் இவர்களை மகள்களாக வளர்த்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்தவர்கள் தமிழ் பெண்மணிகளான அங்கவை, சங்கவை.

மேலும் படிக்க: உங்களுக்கு கருநாக்கு உள்ளதா? மறந்தும் இந்த நாளில் இதை கூறிவிடாதீர்கள்..!!

Previous articleகுஷ்புக்கு கோயில் கட்டியது எல்லாம் பைத்தியக்காரத்தனம்..!! குஷ்புவின் மாமியர் நச் பதில்..!!
Next articleவாகன விபத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2,00,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!