உங்களுக்கு கருநாக்கு உள்ளதா? மறந்தும் இந்த நாளில் இதை கூறிவிடாதீர்கள்..!!

0
160
Karu Nakku

Karu Nakku: நமது உடலில் முக்கியமான உறுப்பாக பார்க்கப்படுவது நாக்கு. பலரும் உடல் எடை பருமான உள்ளது எப்படி குறைப்பது?ஏன் இப்படி உடல் எடை கூடிவிட்டது? என்றெல்லாம் வருத்தப்படுவது உண்டு. அதற்கு காரணம் நம்முடைய நாக்கை நாம் கட்டப்படுத்த தவறியது தான். ஒரு உணவை சாப்பிடும் போது அதன் சுவையை நம் நாக்கு அறிந்து அதனை மூளைக்கு கொண்டு செல்வது இதன் வேளை தான். ஒரு உணவு சுவையாக இருந்துவிட்டால் போதும். அவ்வளவு தான் வயிறு முட்ட சாப்பிட்டு விடுவோம். பிறகு வருந்துவோம்.

இவ்வாறு உணவு விஷயத்தில் மட்டமல்ல, எதை அடக்காவிட்டாலும் நாவை அடக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறியுள்ளார். இந்த நாக்கை வைத்து உணவு மட்டும் சுவைக்கவில்லை, பிறருக்கு நாம் சொல்லும் சொல் இந்த நாக்கின் மூலம் தான் வருகிறது. அப்படி இருக்க ஒருவருடைய மனம் புண்படும் படி பேசிவிட்டால் மீண்டும் அந்த சொல்லை நம்மால் பெற முடியாது. அதனால் தான் நாவை அடக்க வேண்டும் என்பார்கள்.

இவ்வாறு இருக்கையில் நமது சாஸ்திரங்களின் படி நாக்கை வைத்து நமது முன்னோர்கள் சில விஷயங்களை வகுத்து வைத்துள்ளனர். அது மூடநம்பிக்கையா இல்லை அறிவியலா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருந்தாலும் காரணம் இல்லாமல் யாரும் எதையும் கூறுவதில்லை. அந்த வகையில் நாக்கில் ஒரு சிலருக்கு கருப்பு புள்ளி இருக்கும். அதனை கருநாக்கு என்று சொல்லுவார்கள். மேலும் அவர்கள் சொன்னால் பலிக்கும் என்றும் கூறுவார்கள். அதனை பற்றி இந்த பதிவில் (karu naku palan in tamil) பார்க்கலாம்.

கருநாக்கு – (Black Tongue Meaning in Tamil)

கருநாக்கு என்பது நாக்கில் கருப்பு புள்ளியாக இருக்கும். இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ஒரு சிலருக்கு ஏற்படும் என்றும், திசுக்குகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத பட்சத்தில் இந்த கரும்புள்ளிகள் ஏற்படும் எனவும், மேலும் சில சமயம் வயிற்று உபாதைகளுக்காக நாம் மருந்து சாப்பிடும் போது அதில் உள்ள பிஸ்மத் எனப்படும் பொருள் நம் நாக்கில் உள்ள பாக்டீரியாவுடன் சேர்ந்து கரும்புள்ளி ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் தான்  நமக்கு உடம்பு சரியில்லை என்று மருத்துவர்களிடம் சென்றால் நாக்கை நீட்ட சொல்லி பார்ப்பார்கள்.

கருநாக்கு உள்ளவர்களின் சொல் பலிக்குமா?

மேலே கூறப்பட்ட காரணங்களால் கருநாக்கு வரும் என்று கூறினோம். இப்பொழுது ஆன்மீக ரீதியாக பார்த்தால் இந்த கருநாக்கு உள்ளவர்கள் எதை கூறினாலும் பலிக்கும் என்று கூறுவார்கள். இவர்கள் சொன்னால் பலிக்குமா என பார்ப்பதற்கு முன்பு இந்த நாக்கு உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் மனதில் எதையும் மறைக்காதவர்களாக இருப்பா்கள்.

மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால் இவர்கள் எந்த சமயத்தில் யாரிடம் என்ன பேசுவார்கள் என்றே கணிக்க முடியாது. மனதில் பட்டதை கூறிவிட்டு கெட்டவர்கள் என பெயர் எடுத்துவிடுவார்கள். ஆனால் அதனை பற்றி கண்டுக்கொள்ள மாட்டார்கள்.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு பணிந்து செல்லக் கூடியவர்கள். ஆனாலும் மனதில் ஏதோ தவறு தோன்றிவிட்டால் என்ன பேசுகிறோம் என தெரியாமல் கேட்டுவிடுவார்கள்.

ஆன்மீக ரீதியாக இந்த கருநாக்கு உள்ளவர்கள் அவர்களின் முன்னோர்களின் ஒரு சிலரின் பிரதிபலிபாகவும் இருப்பார்கள் எனவும் நம்பப்படுகிறது. அப்படி இந்த கருநாக்கு உடையவர்கள் அவர்களின் சொந்தங்களுக்கு ஏதாவது அவர்களையும் அறியாமல் சில வாக்குகளை சொல்லிவிட்டால் நிச்சயம் அது நடக்கும் என நம்பப்படுகிறது.

ஏனெனில் ஒரு செயலுக்கான முன்விளைவுகளை இவர்களை துல்லியமாக சொல்லிவிடுவார்கள் என நம்பப்படுவதால் இவர்கள் எதிர்க்காலத்தில் நடப்பதை வியூகமாக சொல்லுவார்கள். பலரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிறகு அவர்கள் சொன்னது போல நடந்துவிட்டால் வருந்துவார்கள்.

இந்த நாக்கு உடையவர்கள் தங்களையும் அறியாமல் திதி நாட்களில் யாரையாவது திட்டிவிட்டால் அது நடக்கும் என நம்பப்படுகிறது. எனவே கருநாக்கு உள்ளவர்கள் யாருக்கும் குறிப்பாக உங்கள் குடும்ப உறுப்பினர்களை திட்டி விடாதீர்கள். உங்கள் மனம் வருந்தி கூறினால் அவர்களுக்கு உடனே பலிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: கண் திருஷ்டியை போக்க கற்றாழை இருக்கு..!! ஆனால் வீட்டு வாசல் முன் கற்றாழை வைத்தால் ஆபத்து..!!