ANGER: எதற்கெடுத்தாலும் கோபப்படும் நபரா நீங்கள்? இதை கன்ட்ரோல் செய்ய என்னென்ன செய்யலாம்?

Photo of author

By Divya

ANGER: எதற்கெடுத்தாலும் கோபப்படும் நபரா நீங்கள்? இதை கன்ட்ரோல் செய்ய என்னென்ன செய்யலாம்?

மனிதனுக்கு சந்தோசம்,கவலை,கோபம் வருவது இயல்பான ஒன்று.இதில் சந்தோசத்தை கூட வெளியில் காட்டாமல் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.ஆனால் கோபம் வந்துவிட்டால் அதை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

கண்களில் படுகின்ற பொருட்களை போட்டுடைப்பது,தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்வது,பிறரை காயப்படுத்துவது உள்ளிட்டவை கோபத்தின் வெளிப்பாடாகும்.அதிகம் கோபம் கொள்பவர்களை வீரர்கள்,பலமானார்கள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறான கூற்று.

எதற்கெடுத்தாலும் கோபப்படும் நபர்களுக்கு பலவீனமே அவர்களது அவர்களது கோபம் தான்.மனிதர்கள் கைகளை முறுக்குவது,முறைப்பது,பற்களை கடிப்பது,நகங்களை கடிப்பது உள்ளிட்ட செயல்கள் மூலம் தங்கள் கோபமாக இருப்பதை உணர்த்துகிறார்கள்.

ஒரு சிலருக்கு கோபத்தில் அதிகம் மூச்சு வாங்கும்.சுவாசம் வேகமாக நடக்கும்.இவ்வாறு கோபப்படும் படும் பொழுது தங்களை தாங்களே சாந்தப்படுத்துவது என்பது மிகவும் கடினமான செயல்.

அப்படி இருக்கையில் கோபம் ஏற்படும் பொழுது சில விஷயங்களை செய்தால் அதை எளிதில் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

முடிந்தளவு கோபம் கொள்ளாமல் இருங்கள்.மீறி கோபம் வருகிறது என்றால் அந்த நேரத்தில் தங்கள் மன நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

இவ்வாறு செய்வதினால் கோபம் தணியும்.கோபம் அதிகமானால் தங்களின் அறைக்கு சென்று சிறிது நேரம் படுத்து ஓய்வெடுங்கள்.அல்லது தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு விஷயத்தை பற்றி நினைத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு செய்தால் கோபம் கட்டுக்குள் வரும்.தினமும் உடற் பயிற்சி,தியானம்,யோகா செய்து வந்தால் கோபத்தை கட்டுப்படும்.