அடம் பிடித்த விஜய்.. வெளுத்து வாங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்.. கோபத்தில் விஜய் என்ன செய்தார்ன்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவருடைய லியோ படத்தை பார்க்க இவரது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல், எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனுமாவார். தமிழ் திரையுலகத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் முதல்முறையாக அவர் ஹீரோவா நடித்தார். குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார்.
அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். 3 முறை ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது’, 3 முறை ‘ஃபிலிம்ஃபேர் விருது’, 4 முறை ‘விஜய் விருது’ என பல விருதுகளை வென்றுள்ளார்.
நடிகர் விஜய்க்கும், அவரது அப்பாவிற்கும் இடைய கருத்து மோதல் பல வருடங்களாக உள்ளதாம். இதை பல முறை எஸ்.ஏ.சி பேட்டியில் கூறியிருக்கிறார்.
விஜய் இளம் வயதாக இருக்கும்போது, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததாம். அதை அப்பாவிடம் சொல்ல, எஸ்.ஏ.சிக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பம் கிடையாது. அவர் எவ்வளவு எடுத்து சொல்லியும் விஜய் கேட்காததால், எஸ்.ஏ.சி திட்டியிருக்கிறார்.
அப்பா திட்டிய கோபத்தில் நடிகர் விஜய் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம். இதனால் பதறிப்போன எஸ்.ஏ.சி பல இடங்களில் தேடியும் விஜய் கிடைக்கவில்லையாம். விஜய்யின் அம்மா ஷோபா ஒரு பக்கம் பயங்கரமாக அழ ஆரம்பித்துவிட்டார். அந்த சமயத்தில் ஒரு தியேட்டர் அதிபர் எஸ்.ஏ.சந்திரசேகரை போனில் அழைத்து, உங்கள் மகன் விஜய் இங்கே அண்ணாமலை படம் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று கூற, உடனே அங்கு சென்று விஜய்யை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் எஸ்.ஏ.சி.
இதன் பிறகுதான் விஜய்யை எஸ்.ஏ.சியே நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தார். எஸ்.ஏ.சி. மகன் விஜய்யை வைத்து ரசிகன், செந்தூர பாண்டி, தேவா, விஷ்ணு உட்பட படங்களை இயக்கினார். இதனையடுத்து விஜய் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்து இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.