அனிகா என்பவர் குழந்தை நட்சத்திரமாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித்துக்கு மகள் கதாபாத்திரத்தில் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இவருக்கு நல்ல பெயரும் பாராட்டும் குவிந்தது.
இவர் அவ்வப்போது தனது வித்தியாசமான மற்றும் விதவிதமான போட்டோக்களை வலைதளங்களில் பதிவிடுவார். அடிக்கடி போட்டோ ஷூட்ஸ் நடத்துவார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைதளங்களில் ரசிகர்கள் பார்வைக்கு தொடர்ந்து பதிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவர் எடுத்த போட்டோ ஷூட் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் தற்போது அந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது. அதில் இவர் கொடுத்திருந்த போஸ்களை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவர் விசுவாசம் திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் இந்த போட்டோ ஷூட்டில் கொடுத்திருந்த போஸ்களை பார்த்து சின்ன நயன் என்று கூறுகின்றனர் கோலிவுட் வாசிகள்.
இந்த போட்டோ ஷூட்டில் இவர் ராணி கெட்டப் போட்டு இருந்தார். 15 வயதே ஆன அனிகா இதுபோன்ற கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்துவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளையும் குழந்தை நட்சத்திரங்களையும் இந்த போட்டோ ஷூட் சீரழிக்கும் செயல் என்று பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.