விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களை வைத்து நடன நிகழ்ச்சி ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இதனுடைய ஒளிபரப்பு ஆரம்பமானது.கடந்த நான்காவது சீசன் பிக்பாஸில் பங்கேற்ற அனிதா சம்பத் இரண்டாவது சீசன் போட்டியாளரான ஷாரீக்குடன் ஒன்றிணைந்து நடனமாடி வருகின்றார். சென்றவாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் இருந்து சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா பதிவிட்டிருந்தார்.
இதனை கவனித்த ரசிகர் ஒருவர் அனிதாவை மிகவும் ஆபாசமான விதத்தில் அவரையும், அவருடைய கணவரையும் மிக தரக்குறைவாக விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டு இருந்தார். இதனால் ஆத்திரம் கொண்ட அனிதா அந்த நபரின் வழியிலேயே பதிலடி கொடுத்து கருத்து பதிவிட்டார்.இந்த நிலையில், அனிதாவின் கருத்தை பார்த்த சில ரசிகர்கள் பொதுவாழ்க்கையில் தாங்கள் இருந்து வருகிறீர்கள். இவ்வாறு உரையாற்ற வேண்டாம் சற்று பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள். வேறு சிலரோ இதுபோன்ற நபர்களுக்கு இப்படி தான் பதிலடி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
ரசிகர்களின் விவாதம் இவ்வாறு சென்று கொண்டிருக்க தரக்குறைவாக பேசிய அந்த நபர் தன்னுடைய கருத்தை நீக்கி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து அனிதாவும் அவருடைய பதில்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு நடுவில் சமூகவலைதளங்களில் பொய்யான பெயரில் கணக்கு ஆரம்பித்து சில விரும்பத்தகாத செயல்களை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.