மிக கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆஞ்ச நேய மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா!!

0
143
Anja Neya Mariamman Maha Kumbabishek Festival which was celebrated with much fanfare!!
Anja Neya Mariamman Maha Kumbabishek Festival which was celebrated with much fanfare!!

மிக கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆஞ்ச நேய மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பாலைவனம். இந்த ஊராட்சியில் உள்ள தொட்டிமேடு ஆலயம்மன் நகரில் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமதேவ வெங்கடேஸ்வர சுவாமி ஸ்ரீ ஆஞ்ச நேய மாரியம்மன் ஆலயம்ஒன்றுள்ளது. இந்த ஆலயம் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகமும் வெகு விமர்சையாக நடைபெற்றுவருகிறது.

இதனையெடுத்து இக்கோவிலில் கடந்த மூன்று நாட்களாக மகா கணபதி பூஜையில் தொடங்கி சிறப்பு பூஜையாக லட்சுமி பூஜை மற்றும் குருபூஜை என பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று  புண்ணிய தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனை காண பல பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

இதற்காக மேளம்,தாளம் முழங்க கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தொட்டி மேடு நகர் கிராம மக்கள் செய்திருந்தார்கள். இந்த கும்பாபிஷேகத்தின் போது மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து கொண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றியும் பங்கேற்றார்கள்.

இக்கும்பாபிஷேக விழாவில் திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன், துணைத் தலைவர் சுகுணா கோபி, மற்றும் ஊராட்சி செயலாளர் சௌந்தரராஜன் உட்பட ஏராளமான செயலாளர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் இந்த செயலைக்கண்ட காவல்துறையினர் பாராட்டி வருகின்றனர்.

Previous articleஇன்று முதல் டாஸ்மாக் மதுபானகடைகளுக்கு தடை! மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleகன்னியாகுமரியில் அரசு பேருந்து மோதி டிரைவர் பலி! பரபரப்பில் அப்பகுதி!