ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்

Photo of author

By Parthipan K

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.ஏப்ரல்-மே பருவ தேர்வு நடக்கவிருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் முந்தைய செமஸ்டர் தேர்வு முடிவுகளை கணக்கிட்டு தேர்வு முடிவுகளை வெளியிட போவதாக அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏப்ரல்-மே பருவ தேர்வு முடிவுகளை தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.