போட்டாச்சா அடுத்த காவி துண்ட?

0
134
Annadurai Statue Issue
Annadurai Statue Issue

சமீபகாலமாகவே, சமூகத்திற்கு தொண்டாற்றிய தேசத் தலைவர்களின் சிலைகளுக்கு காவி துண்டு அணிவிக்கும் இழிவான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அண்மையில் திருவள்ளுவர், பெரியா, எ.ம்ஜி.ஆர் ஆகியோரை தொடர்ந்து  தற்பொழுது அண்ணா சிலைக்கும் காவி துண்டை அணிவித்து மக்களிடையே பெரும் பரபரப்பை மர்ம கும்பல் அரங்கேற்றி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணா சிலை பீடத்தில், இன்று அதிகாலை குப்பைகளை கொட்டி, காவி துண்டை பறக்கவிட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதி பரபரப்புடன் காட்சியளிக்கிறது. மேலும் போலீசார்  இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செயலை செய்த நபர்களை விரைவில் கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை எடுத்தால் தான் இவர்களது அட்டூழியத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும்.

 

Previous article+1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
Next articleஇன்று என்ன தினம் தெரியுமா?