BJP: நேற்று கரூர் மாவட்டத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அண்ணாமலை வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தமிழக பெண்களுக்கு எம்மாதிரியான திட்டங்களை அமல்படுத்தும் என்பது குறித்து விவரித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தற்போதுள்ள மத்திய பட்ஜெட் தாக்கலானது மக்களுக்கு பயன் தரும் வகையில் உள்ளது அதன்படி ஆண்டு வருமானம் 12 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு எந்த ஒரு வரியும் இல்லை.
அதேபோல மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த பொழுது தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 52 ஆயிரம் கோடி மட்டுமே வரி பங்கீடு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மோடி அரசியல் களத்தில் கிட்டத்தட்ட ஆறு லட்சத்து 16 ஆயிரம் கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளும் திமுகவானது மத்திய அரசு எந்த ஒரு நிதியும் ஒதுக்கிடவில்லை என்று தான் குறை கூறி வருகின்றனர். அதேபோல கல்வித்துறைக்கு ஒன்றரை லட்சம் கோடி நிதி ஒதுக்கியிருந்தும் தற்போது வரை பல பள்ளிகளில் அத்தியாவசியமான கழிப்பறை மற்றும் வகுப்பறை ஏதும் இல்லாமல் தற்போது வரை உள்ளது.
அதேபோல மும்மொழி கொள்கை பற்றியும் அண்ணாமலை பேசியுள்ளார். குறிப்பாக அமைச்சர்களின் மகன் மற்றும் மகள்கள் பழமொழிகளில் படிக்கும் பொழுது சாமானிய குழந்தைகள் ஏன் படிக்கக் கூடாது?? என்று கேள்வி எழுப்பி உள்ளார். சாமானிய மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைத்து விட்டால் இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு போஸ்டர் ஒட்ட ஆள் கிடைக்காது என்பதால் இதனை தடுப்பதாகவும் தெரிவித்தார்.
தற்பொழுது டெல்லியில் மகளிருக்கு 2500 ரூபாயை உரிமைத் தொகையாக வழங்க உள்ளனர். அதன்படி வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் கட்டாயம் தமிழகத்திலும் 2500 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் இதற்கு பிரதமர் முழு பொறுப்பு என்று கூறினார்.