அதை செய்ய நாங்கள் தயார்! மறைமுகமாக மாநில அரசை கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை நூறு ரூபாயை கடந்துசெல்ல சென்று கொண்டிருக்கிறது.இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என்று அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்படும் என்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்ததன் அடிப்படையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

ஆனால் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க முற்படவில்லை என மாநில அரசு தொடர்ந்து குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இதற்கு மாநில அரசு எந்தவிதமான சமரசத்திலும் ஈடுபடவில்லை என்ற காரணத்தால், மத்திய அரசின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இப்படியான சூழ்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அந்நிய ஒரு கிராமத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் வேட்பாளரை ஆதரித்து அவர் உரையாற்றினார், எங்கள் கட்சியினர் பொய் கூறாமல் பொது மக்களுக்காக பாடுபடும் எண்ணம் கொண்டவர்கள், எனவே எல்லோரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

2023 ஆம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக வீட்டு வாசல் முன் தண்ணீர் வரும், ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசி ஒரு கிலோ அரிசியை முப்பத்தி ஆறு ரூபாய்க்கு பிரதமர் வழங்கிய அந்த அரிசியை மாநில அரசுக்கு இரண்டு ரூபாய்க்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். மத்திய அரசின் பங்கு கிலோவிற்கு 34 ரூபாய் ஆகும், ஆகவே பொது மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும் சாதாரண மனிதர்களையும் ஒரு தலைவராக ஆக்க கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி என புகழாரம் சூட்டியுள்ளார்.

அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். ஜெயலலிதா நரேந்திர மோடி உள்ளிட்டோர் கூட்டணி சித்தாந்தத்தின் மூலமாக ஏற்பட்ட கூட்டணி லஞ்சம் இல்லாமல் பணிபுரிய எங்களை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார். அந்த சமயத்தில் கூடியிருந்த பொதுமக்களில் ஒருவர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டது என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு பதில் தெரிவித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பெட்ரோல் விலையை முப்பத்தி ஐந்து ரூபாய் வரையில் குறைக்க பாஜக தயாராக இருக்கிறது என கூறியிருக்கிறார்.

அவர் இப்படி கூறியதற்கு காரணம் என்னவென்றால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசு தயாராக உள்ளதா? என்று மறைமுகமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஆனால் நாடு முழுவதும் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு சம்மதம் தெரிவிக்காமல் விடாபிடியாக இருப்பதால் மத்திய அரசு இதில் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகிறது.