BJP Annamalai: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க போவதில்லை என்ற தகவல் உலாவி வந்த நிலையில் இன்று அவரே அதனை உறுதி செய்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பில், பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவருக்கான போட்டி நடைபெறும் அதில் நான் இல்லை, அது நடைபெற்ற முடிந்த பிறகு விரிவாக பேசுவோம். அதேபோல இவர்தான் அடுத்த தலைவர் என்று நான் யாரையும் கை காட்டவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இவர் இப்படி கூறுகையில் கட்டாயம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி என்பது தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தவுடன் “அது கிடக்குது வெங்காய பதவி” என கோபமாக சாடி பேசியிருந்தார். அப்போதிலிருந்தே இவருக்கும் பாஜகவுக்கும் இருந்த விரிசல் அம்பலமானது. தற்சமயம் இதனை அவரே உறுதிப்படுத்தி கூறியுள்ளார். மேற்கொண்டு பாஜகவில் இவருக்கு மாற்று பதவி எதுவாக இருக்கும் என்பது குறித்து தான் அடுத்த கேள்வியாக உள்ளது.
அதுமட்டுமின்றி இது குறித்த பேச்சுவார்த்தை அவர்களுக்குள் நடந்து முடிந்து விட்டது என்றும் கூறுகின்றனர். மத்திய அமைச்சரவையில் முக்கிய இடம் இவருக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அரசல் புரசலான தகவல்கள் கசிந்துள்ளது. இனி வரும் நாட்களில் அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் பாஜக வேறு யாருடனெல்லாம் கூட்டணி வைக்கப் போகிறது என்ற அறிவிப்பை வெளியிடும். அதிமுக மீண்டும் பாஜகவுடன் இணைய முட்டுக் கட்டையாக இருந்தது அண்ணாமலை தான். தற்போது அவரை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் பட்சத்தில் மீண்டும் கூட்டணி கட்டாயம் இணைந்துவிடும்.