பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள்! பாஜக தலைமை செய்த பிரம்மாண்ட ஏற்பாடு!

Photo of author

By Sakthi

பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் பாஜக தொண்டர்களும் மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள், தலைவர்கள் உள்ளிட்டோர்களும் கொண்டாடி வருகிறார்கள். இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை குறிக்கும் விதமாக பாஜகவின் தொழில் பிரிவு சார்பாக சென்னை கமலாலயத்தில் 75 அங்குல தொடுதிரை டிஜிட்டல் டிவி நிறுவப்பட்டிருக்கிறது.

இந்த டிஜிட்டல் டிவியின் திறப்பு விழா நேற்று மாலை பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற இருக்கிறது. விழாவிற்கு தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார், இந்த நிகழ்ச்சியின் துணை தலைவர் எம் எம் ராஜா அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் மற்றும் பலர் பங்கேற்றார்கள்.

விழாவில் தொடுதிரை டிஜிட்டல் டிவியின் செயல்பாட்டை பாஜகவின் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் இந்த டிஜிட்டல் டிவி மூலமாக பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் கலந்துரையாடலை கேட்டு அவரிடம் பேசவும் இயலும், சமூகநீதியை பிரதமர் நரேந்திர மோடி நிலை நாட்டிக் கொண்டிருக்கிறார் எங்களுக்கு அவர்தான் சமூகநீதிக் காவலர் என குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.

மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்த அதிமுகவிற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம், ஆகவே கூட்டணியில் நாங்கள் எதையும் அனுசரித்து செல்வோம் சுமுகமான முறையில் கூட்டணி இடப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.