அண்ணாமலை: ஓர் பக்கம் பருவமழை வெள்ளத்தில் சிக்கி கதறும் மக்கள்.. தலைவரோ மனைவியுடன் சேர்ந்து லவ் டுடே பார்த்த விபரீதம்!  

0
383
Annamalai: On one side, the people are trapped in the monsoon flood and are screaming.. The tragedy of the leader and his wife was seen on Love Today!
Annamalai: On one side, the people are trapped in the monsoon flood and are screaming.. The tragedy of the leader and his wife was seen on Love Today!

அண்ணாமலை: ஓர் பக்கம் பருவமழை வெள்ளத்தில் சிக்கி கதறும் மக்கள்.. தலைவரோ மனைவியுடன் சேர்ந்து லவ் டுடே பார்த்த விபரீதம்!

பாஜக தமிழகம் எங்கும் பால்விலை உயர்வு , மின் கட்டண உயர்வு என அனைத்தையும் எதிர்த்து திமுகவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக அணி தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளின் விலையை உயர்த்திக் கொண்டே வருகிறது. அந்த வகையில் வீட்டு வரியானது அதிகளவு உயர்ந்துள்ளது.

அதேபோல மணல் திருட்டு என்பது தற்பொழுது இந்த ஆட்சியில் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. ஸ்டாலின் அவர்களுக்கு விளம்பரம் மேனியா என்ற நோய் வந்துவிட்டது போல, மக்களின் முன் தன்னை விளம்பரம் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே கலர் கலராக புகைப்படங்களை எடுத்து அவருடைய முகநூலில் வெளியிடுகிறார்.

இந்த பருவமழையால் சென்னை, மயிலாடுதுறை, சீர்காழி போன்ற பகுதிகளில் மக்களின் வீடு வெள்ளத்தால் சூழ்ந்தது.சேதத்திற்கான உடனடி நடவடிக்கைகள் உடனடியா எடுக்கவில்லை.இதனால் பல கட்சிகள் கண்டனம் தெரிவித்த பிறகு தான் ஸ்டாலின் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட இடத்தை பார்த்தார்.தனது மனைவியுடன் லவ் டுடே படம் பார்க்க நேரம் இருந்தவருக்கு பாதிக்கப்பட்ட மக்களை காண நேரமில்லை.

தாமதமாக சந்திக்க வேண்டியுள்ளது. அதேபோல பாலின் கொள்முதல் விலை உயர்வால் பெரும்பாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக நிதி ஏதும் வழங்காமல் அவர்களுக்கு கொசு வலையை விற்பதற்காக தான் சென்னையில் மேயர் ஒருவரை வைத்துள்ளனர். பருவமழை என எது வந்தாலும் திமுக நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு தான் அதிக அளவு லாபம்.

தற்பொழுது பெய்து பருவ மழைக்கே ஆங்காங்கே சென்னையில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனை அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை ஏதும் தற்பொழுது வரை எடுக்கப்படவில்லை. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதம் வரும் மழையை மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள போவார்கள் என்று தெரியவில்லை.

Previous articleமீண்டும் திறக்கப்படும் ஸ்ரீமதி பயின்ற பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Next articleநயன்தாராவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரிட்! புதிய படம் ரிலீஸ் தேதி வெளியீடு!