இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் குஷ்பூ மற்றும் மனோரமா நடிப்பில் பலியான திரைப்படம் தான் அண்ணாமலை. இந்த திரைப்படத்தில் பாம்பு காமெடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
ஆனால் உண்மையில் இந்த காமெடி எடுக்கும் பொழுது பாம்பாட்டி செய்த தரமான சம்பவத்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ரஜினி நூலிலையில் உயிர்த்தப்பினார். இது ரஜினி அவர்களின் அதிர்ஷ்டத்தால் நடந்ததோ என்னவோ.. அப்படி என்ன நடந்தது என்பதை கீழே பார்க்கலாம்.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வை விளக்குவதாக :-
அண்ணாமலை திரைப்படம் எடுக்கப்பட்ட தருணத்தில் விலங்குகளை சித்திரவதை செய்யக்கூடாது என்பது போன்ற சட்டங்கள் பெரிதளவில் இல்லை. பாம்பை வைத்து படம் எடுக்கும் பொழுது பாம்பினுடைய வாய் தைக்கப்பட்டு இருக்கும். அதிலும் குறிப்பாக பாம்பு நாம் சொல்வது போல் கேட்காது பாம்பு செல்வதை வைத்து தான் நாம் படம் எடுக்க வேண்டும் என்ற சூழல் எனவே யாரும் பாம்பை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் துளி அளவும் சத்தம் வரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறிதளவு அசைந்தாலும் பாம்பிற்கு தொந்தரவு ஆகிவிடும் என்பதற்காக அவரும் அசையாமல் இருக்க வேண்டிய நிலையில் படபிடிப்பானது துவங்கியது. பாம்பும் மெதுவாக உருது நடிகர் ரஜினியின் மீது ஏறி படம் எடுத்து நின்றது. அந்த தருணத்தில் பாம்பாட்டிக்கும் மேனேஜருக்கும் வழியில் சண்டை ஏற்பட்டதாகவும் அவர்களை சத்தம் போட வேண்டாம் எனக் கூறி இந்த காட்சியை படம் எடுத்ததாகவும் தெரிவித்த இயக்குனர் அதன் பின் நடந்த சில முக்கிய விஷயங்களையும் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இந்த படம் காட்சி செய்யப்பட்ட பின்பு தான் உண்மையில் அந்த பாம்பிற்கு வாய் தயக்கப்படவில்லை என்றும் இதற்காகத்தான் பாம்பாட்டியுடன் மேனேஜர் சண்டையிட்டு கொண்டிருந்ததும் இயக்குனர் உட்பட அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது. ஒருவேளை அந்த நேரத்தில் அந்த பாம்பானது யார் மூலமாவது தொந்தரவு செய்யப்பட்டு இருந்தால் அங்கு என்ன நடந்திருக்குமோ..