2026-ல் கூட்டணி ஆட்சிதான்!. பழனிச்சாமிக்கு அண்ணாமலை பதிலடி!…

Photo of author

By அசோக்

2026-ல் கூட்டணி ஆட்சிதான்!. பழனிச்சாமிக்கு அண்ணாமலை பதிலடி!…

அசோக்

Information has come out from Edappadi Palaniswami's side that there is another reason to evict Annamalai

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார்.

அதாவது, இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. அதாவது கூட்டணி அரசு என்பது போல அவர் பேசியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு பிறகு மற்றவை பேசி முடிவு செய்யப்படும் என சொல்லியிருக்கிறார். இதிலிருந்து அமித்ஷா மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம் என அரசியல் விமர்சகர்கள் பேசினார்கள்.

ஆனால், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘கூட்டணி ஆட்சி மட்டும்தான். கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவில்லை. அதுதான் எங்கள் நிலைப்பாடும். டெல்லியில் பிரதமர் மோடி தலமையிலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் என அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார். நீங்களாக எதையும் கற்பனை செய்யகூடாது’ என விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது நான்தான் முதல்வர்.. பாஜக சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இருக்காது என்பதைத்தான் மறைமுகமாக பழனிச்சாமி சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ‘2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. எனவே, கூட்டணியோடு கூடிய ஆட்சியே அமையும்’ என சொல்லியிருக்கிறார். அதாவது ஆட்சியில் பாஜகவும் பங்கேற்கும் என்பது போல இருக்கிறது அவரின் கருத்து.