தமிழகத்தில் பாஜகவுக்கு 25 எம்பிக்கள் டார்கெட்! அடுத்து திமுக நடைபிணம் தான் – அண்ணாமலை சூசக பேச்சு
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துவிட்டால், திமுக நடை பிணமாக தான் ஆட்சி நடத்துவார்கள். ஆட்சியை எப்படி பிடிப்பது. எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என எங்களுக்கு தெரியும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார்.
திமுகவின் 70 ஆண்டு கால ஊழல்
கோவை மாவட்டத்தில் குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால்கள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுக்கு பெரிய எழுச்சி கிடைத்துள்ளது.
2024 இல் பாஜகவுக்கு 25 எம். பி. க்கள் கிடைப்பர்கள் என்பது இலக்கு. தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திமுக ஊழல் செய்து வருகிறார்கள். தேர்தலில் பூத் கமிட்டி பிரதிநிதிகள் சிறப்பாக செயலாற்ற வேண்டும். அவர்கள் தான் நமக்கான வாக்குகளை உறுதி செய்பவர்கள்.
நம் கையில் இருக்கும் பணத்தை இழந்து கட்சியை வளர்த்து வருகிறோம். நமது போராட்டங்கள் நம்மை மக்களிடம் அதிகமாக கொண்டு சேர்க்கிறது.
பாஜகவுக்கு 25 எம்பிக்கள் இலக்கு
தமிழகத்தில் நாம் Do or die சூழலில் தான் உள்ளோம். திமுகவிற்கு முடிவு கட்ட இந்த தலைமுறையால் முடியும். 2024 இல் திமுகவிற்கு முடிவுரை எழுதப்படும். மக்கள் மனசு பாஜக பக்கம் திரும்பிவிட்டது. சூழ்நிலைகளை ஓட்டாக்க வேண்டும்.
2024 இன் நிலை பொள்ளாச்சியில் இருந்து மாற்றம் பெரும். பாஜகவுக்கு 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துவிட்டால், திமுக நடை பிணமாக தான் ஆட்சி நடத்துவார்கள். ஆட்சியை எப்படி பிடிப்பது. எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என எங்களுக்கு தெரியும். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அவர் அப்போது சூசகமாக பேசியுள்ளார்.