எடப்பாடி மகனுடன் அண்ணாமலை ரகசிய சந்திப்பு!! உறுதியாகும் பழைய கூட்டணி.. அடித்துக் கூறும் அதிமுக நிர்வாகிகள்!!

Photo of author

By Rupa

ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைய எடப்பாடி மகன் மித்ரனிடம் அண்ணாமலை மறைமுக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பாஜக கூட்டணியானது கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே முறிந்து விட்டது. இதனால் அதிமுக தனித்து நின்று தேர்தலை சந்தித்தது. இவ்வாறு இருக்க அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முடிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என்பதால் அவரை மேலிடம் டார்கெட் செய்ய ஆரம்பித்தது. இதன் வெளிப்பாடாக இவரது பதவிக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தனர். மேற்கொண்டு மீண்டும் கூட்டணி அமைக்க நீங்களே வழி வகுக்க வேண்டும் என்ற ஆணையும் பிறப்பித்துள்ளனர்.

இதனால் வெளிநாட்டு அரசியல் படிப்பை முடித்துவிட்டு வந்த அண்ணாமலை அதிமுக குறித்து ஒருபோதும் வாய் திறப்பதில்லை. ஒரு படி மேலாக எடப்பாடி பழனிச்சாமியின் மகனை அழைத்து பேச்சு வார்த்தையும் நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மறைமுகமாக டெல்லிக்கு அழைத்து சென்று அமித்ஷாவையும் சந்திக்க வைத்துள்ளார். அதிமுக கூட்டணி முறிந்ததற்கு முக்கிய காரணமே மரணமடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி குறித்து அவதூறாக பேசியதுதான். அதனை சரி கட்டும் விதமாக எடப்பாடி மகனிடம் அண்ணாமலை எடப்பாடி குறித்து புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.

இதனால் மனம் மாற அதிக வாய்ப்புள்ளதாகவும், அதுமட்டுமின்றி அதிமுக நிர்வாகிகள் சிலர் கட்டாயம் பாஜக வுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்ளவோம் என்றும் கூறியுள்ளனர். வரப்போகும் சட்டமன்ற தேர்தலை பாஜகவுடன் இணைந்து அதிமுக களம் காணும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதுமட்டுமின்றி எடப்பாடியும் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்று சூசனமாக கூறியது இதை தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.