அண்ணாமலை திடீர் ராஜினாமா.. தோல்விக்கு நான் தான் காரணம்!! வெளிவந்த பரபரப்பு தகவல்!!

0
1607
Annamalai suddenly resigned.. I am the reason for the failure!! Exciting news!!
Annamalai suddenly resigned.. I am the reason for the failure!! Exciting news!!

அண்ணாமலை திடீர் ராஜினாமா.. தோல்விக்கு நான் தான் காரணம்!! வெளிவந்த பரபரப்பு தகவல்!!

இந்த நாடாளுமன்ற தேர்தலானது பாஜகவிற்கு பெரும் அடியாகவே உள்ளது.கடந்த இரண்டு வருடங்களாக தங்களது ஆட்சியை தனி பெரும்பான்மையுடன் கைப்பற்றி இருந்த நிலையில் இம்முறை அதனை இழக்க நேரிட்டது.குறிப்பாக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட காலூன்ற முடியவில்லை.இதற்கு முக்கிய காரணமாக அண்ணாமலை இருந்ததால் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து தொடர்ந்து டெல்லி மேலிடத்திற்கு புகார்கள் சென்ற வண்ணமாகவே உள்ளது.

இதனிடையே அண்ணாமலை அவர்கள் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் முடிவையொட்டி தனது பதவியை ராஜினாமா செய்வதாக தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திடம் தெரிவித்துள்ளார்.ஆனால் இவரோ அண்ணாமலையின் முடிவுக்கு முற்றிலும் மறுப்பு கூறியுள்ளார்.மேற்கொண்டு இந்த தகவல் குறித்து மேலிடத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனடியாக மேலிடம் அண்ணாமலையை தொடர்பு கொண்டு தற்பொழுது மத்தியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது இது குறித்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும்.

பதவி குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி வானதி முதல் தமிழிசை சௌந்தர்ராஜன் வரை அனைவரும் அண்ணாமலையை பதவி நீடிக்கும்படியும் கேட்டுள்ளனர்.ஆனால் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக தோல்வியடைந்ததற்கு நான்தான் காரணம் அதனால் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.இதே போல உத்திரபிரதேச தோல்விக்கு காரணம் எனக்கூறி துணை முதல்வர் பதவியை தேவேந்திர பட்னா ராஜினாமா செய்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஆனால் மேலிடம், அரசியலில் வெற்றி தோல்வி என்பது நடுநிலையானது இதனை பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளது.இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்ததையொட்டி அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் பாஜகவை வளர்க்க தான் தன்னை இங்கு அனுப்பி உள்ளார்கள்.அதேசமயம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.

மற்றவர்களோடு அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமென்றால் வேறு ஆளை தான் பார்பார்ப்பார்கள் என்று கூறியிருந்தார். இது மேலிடம் அவருக்கு கொடுக்கும் அழுத்தத்தை சொல்வதுபோல் இருந்தது. அண்ணாமலை பதவி ராஜினாமா குறித்த தகவலானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது.ஆனால் அதிகாரப்பூர்வமாக தற்பொழுது வரை எதுவும் இது குறித்து வெளியிடப்படவில்லை.