BJP: பல்வேறு மாநிலங்களில் பாஜக மாநில தலைவர்களை மாற்றும் நேரம் வந்துவிட்டது அதன்படி தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறொருவரை அமர்த்த பாஜக முடிவெடுத்து விட்டது. இதற்கு பின்னணியில் முக்கிய காரணமாக அதிமுகவை தான் கை காட்டுகின்றனர். அதிமுக பாஜக நட்புறவு உடன் இருந்த நிலையில் அதற்கு புள்ளி வைத்து முடித்து வைத்தது அண்ணாமலை தான். மேற்கொண்டு இருவரும் தனி பாதையில் சென்ற போது வெற்றிவாகை சூட முடியவில்லை.
குறிப்பாக திமுகவை எதிர்க்க இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு வந்துள்ளது. ஆனால் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, இதனை சாக்கு காட்டி தனக்கு தேவையான ஒன்றை டெல்லி மேலிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார். அதுதான் அண்ணாமலையை கட்சியிலிருந்து விலக்கி வைப்பது, குறிப்பாக தமிழ்நாடு பக்கம் அண்ணாமலை வாடை கூட வரக்கூடாது என கேட்டுள்ளாராம். தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தான் என கூறிய நிலையில் தற்போது இளம் தலைவரான ஆனந்த அய்யாசாமி பெயரும் அடிபட்டு வருகிறது.
இவர் தென் தமிழகம் முழுவதும் மிகுந்த பிரபலமானவர். எப்படி அண்ணாமலை வைத்து கொங்கு பகுதியை வளைத்து போட்டார்களோ அதேபோல தென்காசி, விருதுநகர், ராஜபாளையம், நெல்லை போன்ற தென் மாவட்டத்தை வளைத்து போட்டு விடலாம் என்று எண்ணுகின்றனராம். மேற்கொண்டு மற்ற இளந்தலைவரை நியமிப்பதால் பாஜக நிர்வாகிகள் சற்று திருப்தி அடையும் வாய்ப்புள்ளதாகவும் மேற்கொண்டு உற்சாக சுறுசுறுப்புடன் கட்சி இயங்கும்என கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இவரை அமர்த்தும் பட்சத்தில் அண்ணாமலைக்கு நிகராகவே அதவாது அவரின் தம்பி போலவேஇவர் செயல்படுவார் என்று கூறுகின்றனர்.