மீண்டும் தலைவராகப் போகும் அண்ணாமலை.. டெல்லி மேலிடம் திடீர் ஆலோசனை!!

BJP ADMK: தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகப் போகிறார் என்ற அறிவிப்பானது சமீபத்தில் உலாவி வந்தது. மேற்கொண்டு அண்ணாமலையும் இதனை உறுதி செய்து விட்டார். ஆனால் பாஜக இவ்வளவு தூரம் தமிழகத்தில் வளர்ந்து வந்ததற்கு அண்ணாமலை தான் காரணம், அவரை பதவியிலிருந்து நீக்கம் செய்யக்கூடாது என்று அவரது தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேற்கொண்டு அவரை ஆதரித்து சமூக வலைத்தளம் முழுவதும் மேலிடத்திற்கு பிரஷர் கொடுத்து வருகின்றனர். ஆனால் டெல்லியில் நயினார் நாகேந்திரன் பதவியேற்க முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மதிமுக மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டுமென்றால் கட்டாயம் அண்ணாமலை இருக்கக் கூடாது என்று அவரை டார்கெட் செய்ததால் டெல்லி மேலிடம் இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனால் அண்ணாமலை ஆதரவுகள் இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கொண்டு அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சரவையில் பெரிய பதவி கிடைக்கப்போகிறது எனவும் கூறுகின்றனர். இப்படி இருக்கையில், சுலபமாக தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்கி விட முடியாது என்று ஒரு பக்கம் தகவல் கிடைத்துள்ளது. அப்படி மாறும் பட்சத்தில் அதனை தமிழக பாஜக நிர்வாகிகளும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள் என்பதால் மேலிடம் சற்று ஆலோசனை செய்ய இருப்பதாக கூறுகின்றனர்.

மேற்கொண்டு தனிக் குழு அமைத்து அதிமுகவுடன் இது குறித்து பேச நயினார் நாகேந்திரனை அனுப்பி வைக்கவும் டெல்லி முடிவு செய்துள்ளதாம். இந்த ஆலோசனையில் அதிமுக சற்று தலையசைக்கும் பட்சத்தில் மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என கூறுகின்றனர்.