இலக்கா இல்லாத முன்னாள் அமைச்சருக்காக மாற்றப்பட்ட முப்பெரும் விழா- திமுக திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய அண்ணாமலை!!
கோவை மாவட்டத்தில் நாளை திமுக முப்பெரும் விழாவை நடத்த உள்ளது. தற்பொழுது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி வாகை சூடிய காரணத்தினாலும் மேற்கொண்டு இன்று கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு என மூன்றையும் ஒன்று சேர்த்து முப்பெரும் விழாவாக நாளை கொண்டாட உள்ளனர்.
ஆனால் இந்த விழாவானது கலைஞர் நூற்றாண்டு நிறைவான இன்றுதான் கொண்டாடும் படி திட்டமிட்டிருந்தனர். சென்ற வருடம் இதே நாளில் தான் செந்தில்பாலாஜியை கைது செய்தனர் அதனால் இன்று கொண்டாடமால் விழாவின் தேதியை மாற்றியமைத்துள்ளனர்.தற்பொழுது இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த முப்பெரும் விழா தள்ளி வைத்ததற்கு காரணம் உண்டு.
https://x.com/BJP4TamilNadu/status/1801198829477265710
ஏனென்றால் கடந்த வருடம் இதே 14 ஆம் தேதியில் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.இதே நாளில் மீண்டும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டால் அவரின் கைது சேர்ந்த கொண்டாட்டம் தான் இது என்ற பேச்சு அடிபடும் என்ற காரணத்தினாலே பயந்து கொண்டு தேதியை மாற்றியுள்ளனர்.அதுமட்டுமின்றி என்றும் இல்லாத அளவிற்கு மின்கட்டனமானது உயர்த்தி நூதன முறையில் மக்களிடம் வசூல் செய்து வருகிறது.தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்த கோவை மாவட்டமானது தற்பொழுது பின் தங்கியுள்ளது.
இதன் மூலம் சிறு குறு தொழிற்சாலை உரிமையாளர்களும் அதனை சார்ந்து இருந்த நிர்வாகிகளும் பெருமளவில் பாதிப்பை சந்தித்துள்ளனர்.தொழில்துறையில் மட்டுமின்றி கல்வியிலும் கோவை மாவட்டமானது பின்தங்கியே உள்ளது.அதேபோல அத்திக்கடவு என்ற திட்டத்தை கோவை மக்கள் பெரும்பாவளவில் எதிர்பார்த்து இருக்கும் பட்சத்தில் அதனை வெறும் வார்த்தையாகத்தான் திமுக வைத்துள்ளது இவ்வாறு திமுகவின் குற்றங்களை அடுத்தடுத்தாக அடுக்கி அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.