என் தகுதிக்கு “நாய் பேய் சாராய வியாபரிக்கெல்லாம் பதிலளிக்க முடியாது” செந்தில் பாலாஜிக்கு ரிவென்ஜ் கொடுத்த அண்ணாமலை!
திமுக சில தினங்களுக்கு முன்பு பாஜக இந்தியை திணிப்பதாக போராட்டம் நடத்தியது. தற்பொழுது பாஜக, திமுக ஆங்கிலத்தை திணிக்கிறது என போராட்டம் நடத்தியுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அண்ணாமலை திமுகவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை குவித்தார். அதில், இந்தி எதிர்ப்பு என்பது காலிகள் சேர்ந்து நடத்தும் வெங்காய அரசின் போராட்டம் என்று பெரியார் கூற்றை கூறி அதுபோல தான் தற்பொழுது திமுக செய்து வருவதாக தெரிவித்தார்.
திமுக இந்திய எதிர்ப்பது இந்தி வேண்டாம் என்பதற்காக அல்ல,ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக எனக் கூறினார். தமிழை நிலைநாட்ட வேண்டும் என்ற வகையில் திமுக எந்த வித போராட்டத்தையும் நடத்தவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, நடந்து முடிந்த பத்தாவது பொதுத் தேர்வில் மட்டும் தமிழ் மொழியில் 48 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார். இவர்கள் ஆட்சி அமைத்து வந்த பொது தேர்வில், இவ்வளவு மாணவர்கள் தமிழ் மொழியிலேயே தோல்வி அடைந்தது இதுவே சரித்திரத்தில் முதல் முறை.
இந்தியை திணிப்பவர்கள் ட்ராமா அரசியல் செய்கிறார்கள் என கூறுபவர்கள் , ஹிந்திக்கு மாறாக ஆங்கிலத்தை திணிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளனர் எனக் கூறினார். அதேபோல திமுகவின் பட்டத்து இளவரசர் உள்ளூர் நடிகைகளுடன் ஒரு படம் கூட நடிக்க விரும்புவதில்லை, அதற்கு மாறாக எமி ஜாக்சன் ,ஹன்சிகா மோத்வானி ஆகியோரோடு தான் நடிப்பாரா என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி இந்தி திணிப்பு என்ற பெயரில் ஆங்கிலத்தை நிலை நாட்ட நினைத்தால் மீண்டும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
வரும் ஆண்டுகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் என அனைத்து படிப்புகளிலும் தமிழ் முறை கல்வி கொண்டுவர வேண்டும். தற்பொழுது வரை கோவையில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தற்கொலைப்படை தாக்குதலை, கேஸ் வெடிப்பு விபத்து என கூறுவது வெட்கக்கேடு என்றும் தெரிவித்தார்.
மேலும் அங்கிருந்த நிருபர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி இவர் மீது குற்றம் சாட்டியுள்ளதை குறித்து இவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு இவர், நாய், பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது என செந்தில் பாலாஜியை நேரடியாக விமர்சனம் செய்துவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்பட்டார்.