விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா?

0
598
Annamalai
Annamalai

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா?

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த புகழேந்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் 06 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையமானது விக்கிரவாண்டி தொகுதியை காலித் தொகுதி என்று அறிவித்தது.இந்நிலையில் வருகின்ற ஜூலை 10 அன்று இந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

வேட்புமனு தாக்கல் ஜூன் 14 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி வரை இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.திமுக சார்பில் அன்னியூர் சிவா அவர்களை வேட்பாளராக நிறுத்த அக்கட்சி முடிவு செய்திருக்கிறது.அதேபோல் பாஜக கூட்டணி,அதிமுக,நாதக உள்ளிட்ட கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் களம் காண்பது குறித்து ஆலோசித்து வருகிறது.இதனால் லோக்சபா தேர்தலை போல் இடைத்தேர்தலிலும் நான்கு முனை போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்செல்வம் 1,13,766 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் புகழேந்தி அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்பொழுது விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் போட்டியிடுகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.உண்மையில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாமக தான் விக்கிரவாண்டி தொகுதியில் களம் காணப் போகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.இதன் மூலம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் போட்டியிடுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் வதந்தி என்பது தெரியவந்திருக்கிறது.