BJP: தமிழக பாஜக தலைமை மாற்றியதிலிருந்து நிர்வாகிகள் யாருக்கும் உடன்பாடில்லை. இதன் வெளிப்பாடாக தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் நயினாருக்கு யாரும் மரியாதை என்பது தருவதில்லை. இது ரீதியாக பல நிகழ்ச்சிகளில் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு பக்கம் நியாயமான காரணமாக அண்ணாமலை வந்தது பிறகுதான் வாக்கு சதவீதம், அங்கீகாரம் என அனைத்தும் கிடைத்தது என்றும் கூறி வருகின்றனர்.
ஆனால் அவரே ஒரு கட்டத்தில் தனக்கு கொடுத்த மரியாதை தற்போதிருக்கும் பாஜக தலைவருக்கும் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இப்படி இருக்கையில் அதிமுக கூட்டணிக்காக மட்டுமே அண்ணாமலை தலைமை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு மாறாக மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தனர். ஆனால் அவ்வாறான அறிவிப்புகள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
தமிழகத்தில் அரசியல் நகர்வுகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு நயினார் நாகேந்திரன் தலையாட்டி பொம்மையாக மட்டுமே இருப்பார், அண்ணாமலை அளவிற்கு செயல்பட மாட்டார் என்று அமித்ஷா உள்ளிட்டோர் பார்த்து வருகின்றனர். இதனால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்க்கலாம் என எண்ணுகின்றனர். அச்சமயத்தில் உத்வேகத்துடன் செயல்படும் அண்ணாமலை தான் சரியான நபர் என்று தேர்ந்தெடுத்துள்ளனர்.
இது ரீதியாக நயினார் நாகேந்திரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், அரசியல் என்பது நிரந்தர நண்பன் இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம், நான் வெற்றி பெறுவேனோ தோல்வி பெறுவேனோ, எனது பதவி மூன்றாண்டு காலம் தான். அதற்குள் வேறு தலைவர் மாற்றலாம் என்று சூசகமாக கூறியுள்ளார்.

