அண்ணாமலை கோரிய வலியுறுத்தல்! செவி சாய்க்குமா தமிழக அரசு!

Photo of author

By Rupa

அண்ணாமலை கோரிய வலியுறுத்தல்! செவி சாய்க்குமா தமிழக அரசு!

சில மாதங்களாக காவேரி மேகதாது அனை கட்டுதல் பிரட்சனை தீவிரமாக நடந்து வருகிறது.நமது தமிழகத்திலிருந்து பலர் கர்நாடகாவை எதிர்த்து போர்கொடி தூக்கியுள்ளனர்.பலமுறை நமது தமிழக அரசு மத்திய அரசிடம் முறையிட்டும் ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்பொழுது கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற பசவராஜ் பொம்மையும் மேகதாது அணை கட்டியே தீர்வோம் என கூறியுள்ளார்.இதனை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தஞ்சாவூர் டெல்டா பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

இந்த போராட்டத்தில் பாஜக செயலாளர் ஹெச்.ராஜா,முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ,ஆகியோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் போது அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறியது, தமிழக விவசாயிகள் மற்றும் பெங்களூரில் உள்ள தமிழர்கள் ஆகியோருக்காக நடத்தப்படும் போராட்டம் இது எனக் கூறினார்.இந்தப் போராட்டமானது தமிழ்நாட்டில் உள்ள கட்சி மற்றும் கர்நாடகாவில் உள்ள கட்சி இடையில் போட்டி கொள்வது ஆகும்.

போராட்டத்தின் போது பல கோரிக்கைகளையும் வலியுறுத்திக் கூறினார்.அதில் குறிப்பாக காவேரி ஆற்று மணல் கொள்ளையை நிறுத்தக்கோரி கேட்டுக்கொண்டார். அதேபோல நெல் கொள்முதல் மையங்களில் நடைபெற்று வரும் ஊழலும் தடுக்க வேண்டும் என்றார்.அதனையடுத்து கரும்பு விவசாயிகளுக்கு 1400 ரூபாய் அதிகரித்து மானியம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.அதுமட்டுமின்றி திமுக கூறிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.மக்களின் நலனுக்காக வருடம் முழுவதும் போராட தயாராக உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.