BJP: சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் அதிமுக பாஜக மீண்டும் இணைந்தது. குறிப்பாக லோக்சபா தேர்தலில் இவர்களின் கூட்டணியானது முறிவு பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக அண்ணாமலை விளங்கினார். மேற்கொண்டு கூட்டணி பிரச்சனையில் அதிமுக மீண்டும் இணைந்தால் பதிவை விட்டு விலகிக் கொள்கிறேன் என்று சவால் விட்டார்.
அதேபோல வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. அண்ணாமலையும் சொல்லியது போலவே பாஜக வை விட்டு விலகியுள்ளார். இதில் பின்னணி காரணங்கள் பலவற்றை அடுக்கடுக்காக கூறுகின்றனர். ஒரு பக்கம் எடப்பாடி பாஜக மேலிடத்தில் அண்ணாமலை இருக்கவே கூடாது என்று கண்டிஷன் போட்டதாக கூறுகின்றனர். மறுப்புறம் எடப்பாடி மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரு சாதியை சேர்ந்தவர்கள், அப்படி இருக்கையில் அண்ணாமலை வளர்வது இவருக்கு பிடிக்கவில்லை.
அதனால் தான் இப்படி ஒரு நிபந்தனையை வைத்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் அண்ணாமலைக்கு மேலிடம் பதவியை விட்டு விலகுமாறு அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. தற்பொழுது புதிய பாஜக மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் கூறியதாவது, அண்ணாமலையை யாரும் கட்சியை விட்டு விளக்க முடியாது. அவர் பாஜகவின் சொத்து. தமிழக பாஜகவிலிருந்து ஒருத்தரும் அவரை வெளியேற்ற இயலாது.
அரசியல் மாற்றங்கள் என்பது ஒவ்வொரு கட்சியிலும் இருக்கும் ஒன்று. அது நடந்து கொண்டுதான் இருக்கும். ஒரு சிலர் கூட்டணியை வரப்போகும் தேர்தலுக்காக வைப்பார்கள், அடுத்த தேர்தலில் முடித்துக் கொள்வார்கள். இதெல்லாம் சாதாரணமான ஒன்று. ஆனால் அரசியலை மிகவும் நாகரிகமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என கூறியுள்ளார். அதே கணம் அண்ணாமலையும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நான் சாதாரண தொண்டன். மோடியை தொடர்ந்து கட்சி ரீதியாக மத்திய நிர்வாகிகள் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். அதிமுக பாஜக வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகளாக இருந்தாலும், காமன் மினிமம் ப்ரோக்ராம் கொண்டு கட்சியை கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளதால் இனி வரும் நாட்களில் எந்த ஒரு சந்தேகமும் இருக்காது என கூறியுள்ளார்.