அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கான தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

Photo of author

By Anand

கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த பழைய முறையை மாற்றி விட்டு 2 ஷிப்டுகளின் அடிப்படையில் சுழற்சிமுறை வகுப்புகள் நடைமுறைக்கு கொண்டு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மீண்டும் பழைய முறையையே செயல்படுத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி காலை 9.30 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறும். இதில் ஒரு நாளைக்கு 6 பாடவேளைகள் என ஒதுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பாடவேளை என்ற வீதத்தில் 6 மணி நேரம் வகுப்புகளும், பிற்பகல் 1.30 மணியிலிருந்து 2.30 மணி வரையிலான 1 மணி நேரம்  உணவு இடைவேளையாகவும் நடைமுறைபடுத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.