அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது!
நேற்று அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் அறிவிப்ப ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தின்யின் கீழ் செயல்பட்டு வரும் சட்ட கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி படிப்பில் சேர மாணவர்களுக்கான சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்மிகு சட்ட கல்லூரி 14 அரசு கல்லூரிகளில் மற்றும் திண்டிவனம் தனியார் சரஸ்வதி சட்டக்கல்லூரி போன்றவைகளில் 17610 இடங்களில் மாணவர் சேர்க்கப்பட உள்ளனர்.
மேலும் அதற்கான விண்ணப்ப படிவம் கடந்த நாலாம் தேதி தொடங்கியது. இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in/ என்ற அதிகார பூர்வமான இணையதளத்தில் ஆகஸ்ட் முப்பதாம் ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அம்பேத்கர் சட்டப் பல்கலை கழகம் கூறியுள்ளது.இந்த படிப்பில் சேர்வதற்கு தகுதியுடைய மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த கால அவகாச வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

