இந்த செயல் கனிம வளங்களை திருடுதல் ஆகாது! சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு வரையில் அரசு மணல் குவாரிகள் ஆங்காங்கு செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த அரசு மணல் குவாரி தமிழகம் முழுவதும் விபத்துகள் அதிகமாக நடப்பதாலும் கனரக வாகனங்கள் செல்வதால் கிராமச் சாலைகள் குண்டும் குழியுமாக ஆவதோடு, மணல் எடுப்பதால் தமிழகம் முழுவதும் வரட்சி நிலவிய காரணத்தாலும் இந்த அரசு மணல் குவாரிகளுக்கு தமிழக மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

ஆகவே மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று தெரிவித்து அப்போது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்து அதிமுக ஆட்சி வளர்ந்தவுடன் இந்த மணல் குவாரிகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. அதன் பிறகு மாட்டு வண்டிகளில் ஆறுகளில் மணல் அள்ளும் சம்பவம் நடைபெற்று வந்தது. ஆனால் இதற்கு அரசு தரப்பில் எந்த விதமான உத்தரவும் கொடுக்கப்படாததால் அவர்களும் மணல் அள்ளுவதை நிறுத்திக் கொண்டார்கள். ஆகவே கட்டுமான பணிகளை மேற்கொண்டு இருப்பவர்கள் மணல் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இதற்கிடையில் மலேசிய நாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதனடிப்படையில், கொஞ்சகாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.ஆனால் தற்சமயம் முற்றிலுமாக மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டது ஆனாலும் ஆங்காங்கே மணல் குவாரிகள் மூலமாக மணல் எடுப்பது நடந்து கொண்டுதான் இருந்தது. அதைக் கண்டித்து போராட்டங்களும் நடைபெற்றன.கிராமப்புறங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோர் ஆறுகளில் மணல் எடுப்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இதனால் கிராமப்புறங்களில் வீடு கட்டுவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்த நிலையில், தற்போது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது மண்பாண்ட தொழிலாளர்கள் செங்கல்சூளை தொழில் செய்பவர்கள் இனிமேல் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இருக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்கும்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி பரிசோதனைக்கு பின்னரே மணி எடுக்க வேண்டும் என்று ஒரு சூழலில் இருந்த நிலையில் தமிழக அரசு சார்பாக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அரசு சார்பாக எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என்று சென்ற ஜூலை மாதம் 30ஆம் தேதி ஒரு தகவல் வெளியிடப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

தற்சமயம் மண்பாண்ட தொழிலாளர்கள் செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோர் எடுக்க கோரிக்கை விடுத்திருந்த சூழ்நிலையில், அதற்காக தமிழக அரசு சார்பாக ஒரு புதிய முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் 1.5 அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது கனிம வளங்களை எடுப்பது ஆகாது என்ற காரணத்தால், 1.5 மீட்டர் வரையில் மணல் எடுக்க தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.

ஆகவே மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோர் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 1.5 மீட்டர் வரை எடுத்துக் கொள்ளலாம் அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.ஆனால் இதனை ஒரு முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது போல தமிழகம் முழுவதும் அரசு டெண்டர் பெயரில் மணல் கொள்ளை நடைபெறாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும்.