சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளில் இன்று ரயில்கள் ரத்து!

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளில் இன்று ரயில்கள் ரத்து!

தற்போது அதிகளவில் மழை பொழிந்து வருகிறது.அதனால் ஆங்கங்கே மண்சரிவு ,மரம் விழுதல் போன்றவைகள் நடந்து வருகின்றது.அந்த வகையில் நீலகிரி மலை ரயில் பாதையில் கெட்டி லவ்டேல் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதையின் குறுக்கே மரம் விழுந்துள்ளது.இதனால் அங்கு ரயில்கள் இயக்கப்பட இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலும் அங்கு விழுந்துள்ள மரங்களை அகற்றி ரயில் பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதனால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் ரயில் எண் .06141,குன்னூர் உதகமண்டலம் பயணிகள் சிறப்பு ரயில் குன்னூர்ரில் இருந்து 07.45 மணிக்கு புறப்படும் எனவும் திட்டமிடப்பட்ட தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.அதன் பிறகு ரயில் எண்.06139 உதகமண்டலம் குன்னூர் புறப்படத் திட்டமிடப்பட்டது ரத்து செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment