உயர் கல்வி துறை  வெளியிட்ட அறிவிப்பு ! கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை!

Photo of author

By Parthipan K

உயர் கல்வி துறை  வெளியிட்ட அறிவிப்பு ! கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை!

நடப்பாண்டில் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதனால் கூடுதல் இடங்களை ஒதுக்கக்கோரி கல்லூரி நிர்வாகம் வேண்டுகோள் வைத்தனர். அந்த வேண்டுகோளை தொடர்ந்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருபது சதவீத இடங்களும் ,அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பதினைந்து சதவீத இடங்களும் தனியார் கல்லூரிகளில் பத்து சதவீத இடங்களும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.அதனையடுத்து கூடுதல் மாணவர் சேர்க்கை காரணமாக கூடுதல் ஆசிரியர்கள் தேவை என வேண்டுகோள் வைக்க கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.பல்கலைகழகங்களின் ஒப்புதல் பெற்று சேர்க்கையை நடந்த வேண்டும்  என்ற நிபந்தனைகளும் போடப்பட்டுள்ளது.