இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர்களிடம் இதனை விளக்க வேண்டும்!

0
192

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர்களிடம் இதனை விளக்க வேண்டும்!

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி வழங்கி வருகின்றது.இவ்வாறு வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம் உள்பட பல்வேறு தரப்பிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

இதனையடுத்து இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது அதனால் இந்த வழக்கு மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிக்கான நிதி ஆதாரம் திரட்டப்படுவது குறித்து உண்மை தகவலை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக போதிய தகவல்கள் விளக்கப்படாமல் இருந்தால் வாக்குறுதிகளால் நிதி நிலைத்தன்மையின் மீது ஏற்படும் விரும்பத்தகாத தாக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள முடியாது தேர்தலின் பொது அளிக்கப்படும் வாக்குறுதிக்கான நிதி ஆதாரத்தை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleஇரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!
Next articleவிக்ரம் கலெக்‌ஷனைத் தாண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இத்தனை நாட்கள் போதுமா?