முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! முதியவர்களுக்கு உதவித்தொகை!
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது கேள்வி எழுப்புவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் எதிர் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளது.
விண்ணப்பித்த அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் 90 வயது முதல் 100 வயதுக்குட்பட்ட முதியோர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை 3500 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் . அதனையடுத்து 100 வயத்திற்கு மேற்பட்ட வர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். அதன் பிறகு கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால் மீனவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.