துருக்கி மற்றும் சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்களின் உதவிக்காக தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

0
242

துருக்கி மற்றும் சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்களின் உதவிக்காக தொலைபேசி எண்கள் அறிவிப்பு! 

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மாட்டிக்கொண்ட தமிழர்களின் உதவிக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் துருக்கி மற்றும் சிரியாவில்  எல்லைப் பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்து தரைமட்டமாகின. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் தூக்கத்திலேயே கட்டிடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.  இந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய வைத்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 7900 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எங்கே தோண்டினாலும்  பிணங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. துருக்கியின் 15 மாகாணங்களில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் அங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 65க்கும் மேற்பட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. அவை நிவாரண பொருட்கள் மீட்பு குழு, மருத்துவ குழுவினரையும் அனுப்பி வைத்துள்ளன.

இதையடுத்து துருக்கி மட்டும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கையாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்திய வெளியுறவுத்துறை மற்றும் தூதரகத்துடன் தொடர்பில் உள்ளதாகவும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக தொடர்புகொள்ள தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி எண்கள் :

044- 28525648, 044 – 28515288 பாதிக்கப்பட்ட தமிழர்கள் உதவி மற்றும் நிவாரண பொருட்களுக்காக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். 

 

Previous articleபீதி அடையும் மக்கள்! தொடர்ந்து அதிகரித்து வரும் டைபாய்டு பாதிப்பு!
Next articleதேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் செய்முறை தேர்வின் போது இந்த பொருளை எடுத்து செல்ல தடை இல்லை!