திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
திருப்பதியில் கடந்த புரட்டாசி மாத வழிப்பாட்டை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவு வர தொடங்கினார்கள்.அதனால் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக டைம் ஸ்லாட் டோக்கன் முறை மீண்டும் அறிமுகம் படுத்தப்பட்டது. அதன் மூலம் முன்பதிவு செய்யும் பொழுது பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.அந்த நேரத்தில் அவர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை குறைக்க முடிந்தது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2 தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவாயில் திறக்கப்படும்.பக்தர்கள் ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்களும் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் இந்த தரிசனத்திற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டாயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.
மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் ரூ 10 ஆயிரம் நன்கொடையாக வழங்கி 300 தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு ஜெய விஜய துவார பாலகர்கள் சிலை வரை மட்டும அனுமதிக்கப்படும். அங்கு மகா லகு தரிசனம் செய்து கொள்ளலாம்.
பக்தர்கள் தேவஸ்தான இணையதளமான http://tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் ஒவ்வொரு டிக்கெட்டுகளுக்கும் தலா ரூ 10000 ஆயிரம் நன்கொடையாக கொடுத்தும் ,டிக்கெட் ஒன்றுக்கு ரூ 300 கட்டணமாக செலுத்தியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். நன்கொடை செலுத்தி பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது