திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! டிசம்பர் மாத தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவிற்கு தேதி வெளியீடு!

0
199

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! டிசம்பர் மாத தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவிற்கு தேதி வெளியீடு!

 

திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவில்லை நடைபாண்டில் கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் தினம் தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டு வந்தது.

ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அனுமதிப்பதன் மூலம் தினந்தோறும் 70 ஆயிரம் முதல் 85 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து செல்கின்றனர். ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்ய முடிவதால் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும்  முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.

 

வரும் டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் தினமும் 30000 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கு 10 லட்சத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் வெளியிடப்படவுள்ளது திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Previous articleசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெளுத்து வாங்கும் மழை!
Next articleராஜீவ் காந்தி அறக்கட்டளையில் முறைகேடு!மத்திய அரசின் அதிரடி உத்தரவு!