திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! ரூ 300 டிக்கெட் இந்த தேதியில் வெளியீடு!

0
336
Announcement released by Tirupati Devasthanam! Rs 300 ticket release on this date!
Announcement released by Tirupati Devasthanam! Rs 300 ticket release on this date!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! ரூ 300 டிக்கெட் இந்த தேதியில் வெளியீடு!

அதிக அளவு பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல்  இருந்தது. அதனால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கின்றார்கள். கோவிலில் நேரடியாக டிக்கெட் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் ரூம் 300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி சில மணி நேரத்திலேயே முடிவடைந்து விடுவதால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதனால் முன்கூட்டியே தரிசனம் செய்ய டிக்கெட் குறித்து விவரங்கள் இணையதளத்தில் வெளியாக உள்ளது. அதன் அடிப்படையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ 300 டிக்கெட் www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிக்கெட் பதிவு தொடங்கி சில மணி நேரத்திலேயே முடிந்து விடுவதால் பக்தர்கள் முன்கூட்டியே இதனை கவனித்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleஇந்த படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு! நாளை காலை 10 மணி முதல் நடைபெறும்!
Next articleதண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்!