திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் மாதம் இவர்கள் மட்டும் தரிசனம் செய்ய இன்று டிக்கெட் வெளியீடு!
சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று அனைத்து கோவில்களின் நடை மூடப்பட்டன.அந்த வகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட இரு தெலுங்கு மாநிலங்களில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களும் மூடப்பட்டன.நேற்று மாலை 5.11 மணி முதல் 6.27மணி வரை சூரிய கிரகணம் நடைபெற்றது.அதனையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு புகழ்பெற்ற திருப்பதி எழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது.அதன் பிறகு 12மணி நேரத்திற்கு பிறகு நேற்று இரவு 7.30மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.
ஆகம விதிகளின்படி கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.அதன் பிறகு இரவு எட்டு மணிக்கு மேல் சுவாமி தரிசம் செய்ய பக்கதர்கள் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பத்மாவதி தாயார் கோவில் ,கோவிந்தராஜ பெருமாள் கோவில் ,கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் ,கோதண்டராமர் கோவில் ,நாராயணவனம் ,அப்பலைய்ய குண்டா ,கபில தீர்த்தம் என அனைத்து தேவஸ்தான கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில் பஞ்ச பூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளக்கும் காளஹஸ்தி சிவன் கோவில் மட்டும் கோவில் நடை நேற்று திறந்தே இருந்தது.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை வரும் நவம்பர் மாதம் 65வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளி பக்கதர்கள் சிறப்பு தரிசனம் வாயிலாக சுவாமி தரிசம் செய்ய இன்று மதியம் மூன்று மணியளவில் திருப்பதி தேவஸ்தானத்தின் இனைய தளம் வாயிலாக ஆன்லைன் டிக்கெட்டுகளை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.