விக்ரம் படத்தில் மேலும் ஒரு சின்னத்திரை நடிகை! யார் தெரியுமா?

Photo of author

By Parthipan K

விக்ரம் படத்தில் மேலும் ஒரு சின்னத்திரை நடிகை! யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் தற்போது நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில்,அர்ஜுன் தாஸ்,ஷிவானி நாராயணன்,காளிதாஸ் ஜெயராம்,நரேன் ஆகியோரும் நடிக்கின்றனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தீவிர கமல் ரசிகர் ஆவார்.தான் சினிமாக் கற்றுக் கொண்டது நடிகர் கமல் படங்களை பார்த்துதான் என்று அவர் கூறியுள்ளார்.இதற்கு முன்னர் இவர் இயக்கிய மாநகரம்,கைதி,மாஸ்டர் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.மேலும் விக்ரம் திரைப்படம் இதற்கு முன்னர் 1986ம் ஆண்டு வெளிவந்த நடிகர் கமலின் விக்ரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த படத்தின் டீசரானது சென்ற ஆண்டு நவம்பர் 7ம் தேதி வெளியானது.மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் மூன்று ஜோடிகள் இருப்பதாக படக்குழு அறிவித்தது.முதலில் பிக்பாஸ் புகழ் ஷிவானி  நாராயணன் இந்த படத்தில் இணைந்தார்.அடுத்து மைனா நந்தினி இணைந்து நடிக்கிறார் என்ற தகவலும் வந்தது.தற்போது சன் மியூசிக் தொகுப்பாளரான மகேஸ்வரியும் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதற்கு முன்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பார்.அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யாரும் நடிக்கவில்லை.ஆனால் தற்போது இந்த படத்திலும் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு மூன்று ஜோடிகள் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.இருப்பினும் மக்ச்வரி இந்த படத்தில் இணைந்தது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.