அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மற்றுமொரு வாய்ப்பு!! இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மற்றுமொரு வாய்ப்பு!! இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் நடைபெற்ற இரண்டு சுற்று கலந்தாய்வுகளில் 63% மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பொறியியல் படிப்பில் பயில மாணவர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.ஆனால் இன்ஜினியரிங் படித்த முடித்த லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்கு உரிய வேலை கிடைக்காத நிலை ஏற்படவே மாணவர்களின் பார்வை கலை கலோரிகள் பக்கம் திரும்பியது.இதனால் பல இன்ஜினியரிங் காலேஜேக்கள் இழுத்து மூடப்பட்டது.

ஆனால் தற்பொழுது மாணவர்கள் மருத்துவம்,பொறியியல்,தொழில் நுட்ப படிப்புகளை பயில ஆர்வம் காட்டி வருவதால் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் சரிவு ஏற்பட்டிருப்பதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மே 27 அன்று தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு மே 28 முதல் ஜூன் 29 வரை கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் முதல் கட்டமாக மாற்றுத்திறனாளி மாணவர்கள்,விளையாட்டு வீரர்கள்,முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு மே 28 முதல் மே 30 வரை நடைபெற்றது.பின்னர் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 10 ஜூன் 29 வரை நடைபெற்றது.இந்த கலந்தாய்வின் முடிவில் 63 % சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பபட்டிருக்கிறது.

இந்நிலையில் காலியாக இருக்கின்ற இடங்களுக்கு மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது.அதன்படி காலியாக உள்ள அரசு கலை கல்லூரிகளில் பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் ஜூலை 03 முதல் 05 வரை https://www.tngasa.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.